வங்காள விரிகுடாவின் தென் கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாளை காலை 5.30 அளவில் சூறாவளி ஏற்படும் வாய்ப்புகளுள்ளதாக வாநிலை அவதான நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
45 – 50 Km/h வேகத்தில் ஆரம்பிக்கும் காற்றின் வேகம் 60 – 70 Km/h வேகத்திற்கு அதிகரிக்குமென மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடற் கரை பகுதிகளில் கடும் மழை பொழியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கடும் காற்று, கடும் மழை ஏற்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடற்றொழிலில் ஈடுபடுவர்களை அவதானமாக இருக்குமாறும், கரையோரங்களில் குடியிருப்பவர்கள் மாற்றிடங்களுக்கு செல்வது இழப்புகளிலிருந்து பாதுகாப்பை தருமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.