இலங்கை, இந்திய டெஸ்ட் தொடர் ஆடுகளம் சிக்கலில்

இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற பெங்களுர் சின்னசுவாமி மைதானத்தின் ஆடுகளம் சராசரி ஆடுகளத்துக்கும் குறைவானதாக உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்துள்ளது. அத்தோடு டி மரிட் புள்ளி எனப்படும் 01 புள்ளி குறைப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஆடுகள மற்றும் வெளி மைதான மேற்பார்வைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.

போட்டி மத்தியஸ்தர் ஜகவல் ஸ்ரீநாத்தின் அறிக்கையின் அடிப்படையிலேயே இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. டி மரிட் புள்ளிகள் 05 இனை ஒரு மைதானம் பெற்றுக்கொண்டால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை 01 வருடத்துக்கு நடாத்த முடியாமல் போகும்.

அதிக சுழற்சியும், துடுப்புக்கும் பந்துக்குமான இடைவெளி அதிகமாக காணப்பட்டதாகவும் போட்டி மத்தியஸ்த்தர் ஜகவல் ஸ்ரீநாத் தனது அறிக்கையில் முறையிட்டுள்ளார். முதல் நாளில் மட்டும் அந்த போட்டியில் 16 விக்கெட்கள் வீழத்தப்பட்ட அதேவேளை, 2 1/2 நாட்களுக்குள் போட்டி நிறைவுக்கு வந்தது.

பெங்களூர் சின்னசுவாமி மைதானம் இந்தியாவின் பிரபலமான முக்கியமான மைதானம் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கை, இந்திய டெஸ்ட் தொடர் ஆடுகளம் சிக்கலில்

Social Share

Leave a Reply