ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று(04.04) ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான் உட்பட்டவர்கள் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
குறித்த சந்திப்பு தொடர்பில் “எனது தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழுவினர்களுக்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. இதன்போது எங்களுடைய அரசியல் நிலைப்பாடை ஜனாதிபதிக்கு தெரிவித்தோம். எனவே எமது நிலைப்பாடை நாளைய தினம் அறிவிப்போம்” என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புறக்கணித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.