வவுனியா மாவட்ட தொற்றுயிலாளர் காலமானார்

வவுனியா மாவட்ட தொற்றுயிலாளர் வைத்திய கலாநிதி செல்வரட்ணம் லவன் வவுனியா வைத்தியசாலையில் சற்று முன்னர் காலமானார்.

இரு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் தலையில் பலமாக அடிபட்ட நிலையில், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வைத்திய கலாநிதி லவன் சிகிச்சைகளின் பின்னர் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகளை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தனது 58 வயதில் சற்று முன்னர் காலமாகியுள்ளார்.

அன்னாரது இறுதி சடங்கு பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படுமென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட தொற்றுயிலாளர் காலமானார்

Social Share

Leave a Reply