மதிநுப்பட்மாக செயற்படுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

பொதுமக்களை புத்திசாதுர்யமாகவும், மதிநுட்பமாகவும் நடந்து கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கஷ்டமான நிலையினை புரிந்து கொண்டு அமைதியாக செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் இக்கட்டான பொருளாதர, அரசியல் சூழ்நிலையில் அவற்றை தீர்ப்பதற்கு உதவுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

ஜனநாயக வரம்புக்குள் எதிர்ப்பை காட்டவும், போராட்டங்களில் ஈடுபடவும் சகலருக்கும் உரிமையுண்டு. ஆனால் அண்மைய காலங்களில் அது மீறப்பட்டு வருகிறது. அத்துடன் சாதாரண மக்களது ஜனநாயக உரிமைகள் மீறப்படுவதோடு மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

சட்ட ஒழுங்குகளை மீறி போராட்ட காரர்கள் அச்சுறுத்தல்களில் ஈடுபடுவதோடு காவல்துறை மற்றும் இராணுவத்தினரின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர் என்ற அறிக்கை தமக்கு கிடைக்க பெற்றுளளதாக மேலும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மக்களின் சுமூகமான வாழ்க்கையினை உறுதி செய்ய ஜனாதிபதியினால் தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கை சட்டத்துக்கு உட்பட்டு அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுளள்து என மேலும் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மதிநுப்பட்மாக செயற்படுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

Social Share

Leave a Reply