ஐக்கிய மக்கள் கூட்டணி கட்சிகளுக்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் இலங்கை சட்டதரணிகள் சங்கம் முன்வைத்துள்ள நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் தாம் இடைக்கால அரசாங்கத்தில் பங்கு வகிக்க சம்மதம் என்ற முடிவினை ஐக்கிய மக்கள் கூட்டணி அறிவித்திருந்தது.
இன்று நடைபெறும் சந்திப்பில் ஆளும் கூட்டணியிலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளது.
“இன்றைய நெருக்கடி நிலையிலிருந்து நாடு இயல்பு நிலைமைக்கு திரும்ப வேண்டும். இதற்கான ஒத்துழைப்பை வழங்க நாம் தயார். ஆனால், ஜனாதிபதி சட்டத்தரணிகள் சங்கத்தை, “மத்தியஸ்தராக” ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டுளளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துளளார்.