கடும் வெள்ளத்துக்கு மத்தியில் மாணவர்கள் வகுப்பறையினுள் குடை பிடித்தபடி சாதரண தர பரீட்சசை எழுதிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மாற்று வழிகளை ஏற்பாடு செய்யாமல், மாணவர்களை இவ்வாறு பரீட்சை எழுத வைத்த கம்பஹா தக்ஷிலா மகா வித்தியாலய அதிபர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் L.M.D தர்மசேன தெரிவித்துள்ளார்.
மாகாண கல்வி திணைக்களத்தினூடாக கல்வி அமைச்சு மற்றும், பரீட்சசைகள் திணைக்களம் ஆகியன அவர் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
வேறொரு பரீட்சை நிலையத்தில் பெண் மாணவி மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியர் பதவி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
