இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடர் ஆரம்பித்துள்ளது. கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
இலங்கை அணி 20-20 தொடரில் விளையாடிய அணியிலிருந்து ஒரு மாற்றத்தை செய்துள்ளது. 19 வயதுகுடுப்பட்ட உலக கிண்ண தொடரில் பிரகாசித்த சகலதுறை வீரர் டுனித் வெல்லாலகேயிற்கு இன்று அறிமுகம் வழங்கப்பட்டுள்ளது. பிரவீன் ஜெயவிக்ரம அணியிலிருந்து நீக்கப்பட்டு டுனித் வெல்லாலெக அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சட்சன் ஆகிய இருவரும் உபாதை காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பட் கம்மின்ஸ் அணியில் இணைந்துள்ளார். துடுப்பாட்ட வீரர்கள் மார்னஸ் லபுஷேன் மற்றும், விக்கெட் காப்பளார் அலெக்ஸ் கேரி ஆகியோரும் அணியில் இணைந்துள்ளனர்.
இலங்கை அணி இறுதி 20-20 போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இலங்கை அணி மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அத்தோடு அழுத்தம் குறைவடைந்துள்ளது. இந்த மாற்றம் அவுஸ்திரேலியா அணி பக்கமாக, இலங்கை அணியினது தோற்றப்பாட்டை மாற்றியுள்ளது. இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சு பலத்தினை வழங்கும் என நம்பலாம். ஆகவே இன்றைய போட்டி விறு விறுப்பாக இருக்குமென நம்பப்படுகிறது.
இலங்கை
1 தனுஷ்க குணதிலக்க, 2 பத்தும் நிஸ்ஸங்க, 3 குசல் மென்டிஸ் (வி.கா), 4 சரித் அசலங்க, 5 தனஞ்சய டி சில்வா, 6 தஸூன் சாணக்க (தலைவர்), 7 வனிந்து ஹசரங்க, 8 சமிக்க கருணாரட்ன, 9 துனித் வெல்லாலகே, 10 மகேஷ் தீக்ஷண 11 துஸ்மாந்த சமீர
அவுஸ்திரேலியா
1 டேவிட் வோர்னர், 2 அரோன் பிஞ்ச் (தலைவர்), 3 ஸ்டீவன் ஸ்மித், 4 மார்னஸ் லபுஷேன், 5 அலெக்ஸ் கேரி (வி.கா), 6 மார்கஸ் ஸ்டோனிஸ், 7 கிளென் மக்ஸ்வெல், 8 அஷ்டன் எகர், 9 பட் கம்மின்ஸ், 10 ஜே ரிச்சர்ட்சன், 11 ஜோஷ் ஹாஸ்ல்வுட்
இலங்கை அணியின் வெற்றிகள் ஏன் மக்களுக்கு முக்கியம் – வீடியோ இணைப்பு
