இலங்கையின் பல பகுதிகளிலும், குறிப்பாக மேல்மாகாணத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த துப்பாக்கி சம்பவங்கள் குறைவடைந்து நிலையில் இன்று மீண்டும் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. வத்தளை, எலக்கந்தையில் இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர் ஒருவர் துப்பாக்கி சூட்டை நடாத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். சூட்டுக்கு இலக்கானவர் ராகம போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட வேளையில், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
