இந்தியா, அதானி குழுமம் அதிருப்தி

இந்திய பிரதமர், நரேந்திர மோடியின் அழுத்தம் காரணமாக, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் படி மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க விலைமனு கோராமல் அனுமதி வழங்கப்பட்டதாக” முன்னாள் மின்சாரசபை தலைவர் பெர்டிணான்டோ கோப் குழுவுக்கு தெரிவித்து பின்னர் அதனை வாபஸ் பெற்றிருந்தார். அதனை தொடர்நது அவர் பதவியிலிருந்து விலகினார்.

இவ்வாறான சூழ்நிலையில் அதானி குழுமம் இந்த விடயம் தொடர்பில் தமது அதிருப்தியினை வெளியிட்டுள்ளது.

“அண்டை நாடுகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, பொறுப்புள்ள குழும நிறுவனமாக , இலங்கையில் முதலீடு செய்வது எங்களின் நோக்கமாக காணப்படுகிறது. இரு நாடுகளது உறவுகளின்படி இந்த திட்டம் ஒரு தேவையாக காணப்படுகிறது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் மூலம் நாங்கள் மோசமாக அதிருதிப்தியடைந்துள்ளோம். இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்குள் ஏற்கனவே பேசப்பட்டு விட்டது” என அதானி குழுமத்தின் பேச்சாளர் ஒருவர் இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

“நவம்பர் 24 அன்று, ஒரு கூட்டத்திற்குப் பிறகு, ஜனாதிபதி என்னை வரவழைத்து, திட்டத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்குமாறு இந்தியப் பிரதமர் மோடி தனக்கு அழுத்தம் கொடுக்கிறார் என்று கூறினார். இந்த விஷயம் எனக்கோ இலங்கை மின்சார சபைக்கோ சம்பந்தப்படவில்லை. அது முதலீட்டு சபைக்கானது என நான் சொன்னேன். அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி கூறினார். அதனை தொடர்ந்து ஜனாதிபதி தனக்கு அறிவுறுத்தியதாகவும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்யுமாறும் நிதியமைச்சின் செயலாளளருக்கு கடிதம் அனுப்பியதாகவும், .இது அரசுக்கும் அரசுக்கும் இடையிலான ஒப்பந்தம் என்று நான் சுட்டிக்காட்டினேன். ” வீடியோவில் சிங்கள மொழியில் அதிகாரி ஒருவர் அந்த குழுவில் இவ்வாறு கூறினார் என இந்திய NDTV ஊடகம் தனது செய்தியில் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு உதவிகள், முதலீடுகளுக்கு யாரும் வர தயங்கும் நிலையில், வரவிருந்த இந்த உதவி திட்டங்களையும் இவ்வாறு கெடுத்துவிட்டால் வெளிநாட்டு பணமும், அந்நிய செலாவணியும் நாட்டுக்கு எவ்வாறு கிடைக்கும்? உயர் பதவி நிலைகளிலுள்ளவர்களது இவ்வாறான செயற்பாடுகள் முழு மக்களுக்கும் பாதிப்பாக அமைந்து விடுகிறது.

இந்தியா, அதானி குழுமம் அதிருப்தி

Social Share

Leave a Reply