வெறிச்சோடிய பாராளுமன்றத்தில் தம்மிக்க பெரேரா பதவிப்பிரமாணம்.

பாராளுமன்ற அமர்வுகள் இன்று காலையில் ஆரம்பித்த வேளையில், தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக, சபாநாயர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பாராளுமன்ற அமர்வுகளை, ஐக்கிய மக்கள் கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில் சுயாதீன எதிர்க்கட்சி உறுப்பினர்களில் ஒரு சிலர் மாத்திரமே பாராளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளனர். தமிழ் கட்சிகளது பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்துக்கு செல்லவில்லை என அறியமுடிகிறது.

ஆளும் கட்சி சார்பாகவும் மிகவும் குறைந்தளவு உறுப்பினர்களே பாராளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளனர்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருக்காத பிரதமர் இன்று பாராளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளார்.

வெறிச்சோடிய பாராளுமன்றத்தில் தம்மிக்க பெரேரா பதவிப்பிரமாணம்.
வெறிச்சோடிய பாராளுமன்றத்தில் தம்மிக்க பெரேரா பதவிப்பிரமாணம்.

Social Share

Leave a Reply