எரிபொருள் விலை சர்ச்சை – அமைச்சர் உடனடி விசாரணைக்கு கோரிக்கை

இரண்டு தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற பொது நிறுவன குழு (கோப்) முன்னிலையில் பொது சேவைகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்க, அரசாங்கம் அதிக விலைக்கு எரிபொருட்களை விற்பனை செய்வதாக குற்றம் சுமத்தியிருந்தார். அரசாங்கம் அண்ணளவாக 280 ரூபா அளவில் வரியினை அறவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜயசேகர, இந்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு கோப் தலைவர் கலாநிதி சரித்த ஹேரத்திடம் கோரிக்கை முன் வைத்துள்ளார். ட்விட்டர் மூலமாக இந்த விடயத்தை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை மற்றும் ஆவணங்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள தகவல், கோப் மற்றும் மக்களை பிழையான புரிதல்களுக்கு உட்படுத்துவதாகவும், இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடாத்த தானும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களும் கோரிக்கை முன் வைப்பதாக மேலும் வலுசக்தி அமைச்சர் காஞ்சனா விஜயசேகர தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

எரிபொருள் விலை சர்ச்சை - அமைச்சர் உடனடி விசாரணைக்கு கோரிக்கை

Social Share

Leave a Reply