முள்ளியவளை எரிபொருள் நிலைய உரிமையாளர் மீது தாக்குதல்.

முள்ளியவளை லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உரியவர்கள் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வரை எரிபொருள் நிரப்பும் நிலையத்தை திறக்க மாட்டோம் என அந்த நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த எரிபொருள் நிலையத்தில் விமானப்படையினரின் பாதுகாப்புடன் மாவட்ட செயலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கிராம அலுவலகர்கள் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் பணியாளர்கள் இணைந்து கிராமம் கிராமமாக மக்களுக்கு கிராம அலுவலர்களால் வழங்கப்பட்ட டோக்கன் அடிப்படையில் மிக சிறப்பாக எரிபொருள் வழங்கப்பட்டு வந்தது.

நேற்று மாலை சில கிராமங்களுக்கு டோக்கன் அடிப்படையில் மக்களுக்கு பெற்றோல் வழங்கப்பட்டு வந்த நிலையில், திடீரென விமானப்படையினரின் பாதுகாப்பை மீறி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் தமது முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் வழங்குமாறு வற்புறுத்தியதனை தொடர்ந்து அங்கு வாக்குவாதாம் இடம்பெற்று பின் கைகலப்பாக மாறிய நிலையில், எரிபொருள் நிலைய உரிமையாளர் தாக்கப்பட்டுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிசார்,விமானப்படையினர் அங்கு கூடியவர்கள் தாக்குதல் நடத்தியவர்களை சாமாளித்தபோது முச்சக்கர வண்டியினை அங்கிருந்து எடுத்து சென்றுள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளபோது அங்கு வந்த பொலிசார் ஒருவரை கைதுசெய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஏனையவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

நெருக்கடி நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கான எரிபொருள் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு முடிவடைந்த கடந்த மாதம் மட்டும் 56100 லீற்றர் டீசல் மற்றும் 56100 லீற்றர் பெற்றோல் என்பவற்றை குறித்த நிலையம் விநியோகம் செய்துள்ளது.

“எமது சொந்த நிதியில் பொருட்களை கொண்டு வந்தாலும் அரச அதிகாரிகளுடன் ஒத்துழைத்து சேவையாற்றி வருகின்றோம் இவ்வாறான நிலையிலேயே விமானப்படையினர் மற்றும் பொலிசார் முன்னிலையில் தம்மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள் எனவே தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து தமக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாத பட்சத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை திறக்க மாட்டோம்” என உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

முள்ளியவளை எரிபொருள் நிலைய உரிமையாளர் மீது தாக்குதல்.

Social Share

Leave a Reply