ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, மாலத்தீவுகள் சென்றுள்ள போதும் அங்கிருந்து இன்னுமொரு நாட்டுக்கு பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் போய் சேரவுள்ள நாட்டுக்கு சென்றதன் பின்னரே அவரது இராஜினாமா கடிதம் சபாநாயகருக்கு கையளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்கிழக்காசிய நாடு ஒன்றுக்கு அவர் பயணிக்கவுள்ளதாகவும், இன்று மாலையே அவர் அங்கு சென்று சேருவார் எனவும் அதன் பின்னரே சபாநாயகருக்கு கடிதம் கையளிக்கப்பட்டு, அந்த கடிதம் வெளியிடப்படுமென கூறப்படுகிறது.
