தாக்குதலுக்கு முன்னர் பேசியிருக்கலாமே? – மனோ

படை நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்னர், போராளிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு உரையாடலை ஆரம்பத்திருக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாரளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

போராட்டம் நடத்த விஹாரமகாதேவி பூங்காவை போராளிகளுக்கு தருவதாக காலையில் கட்சி தலைவர்களிடம் ஜனாதிபதி கூறியிருந்தார். அந்த யோசனையை போராளிகளுக்கு கூறி, அமைதியாக இடமாற்றம் செய்ய, ஏன் ஜனாதிபதி முயற்சிக்கவில்லை என மனோ கணேசன் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.

“என்ன இருந்தாலும், அவர்கள் கோதாவை விரட்டியதால்தான் இன்று, ரணில் ஜனாதிபதி..!” என மனோ கணேசன் சுட்டிக் காட்டியுள்ளார்.

 

Social Share

Leave a Reply