சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வருவது தொடர்பில் அறிவித்துள்ளது. இம்மாதம் 24 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இந்த விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிகாரிகளோடு பொருளாதார மற்றும் நிதி கொள்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த இந்த பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
இந்த பயணத்தின் போது எதிர்கால கடன் நிதி திட்டங்கள் தொடர்பிலான அலுவலக மட்ட கையொப்பம் இடப்படவுள்ளதாகவும் மேலும் சர்வதேச நாணய நிதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடன்களை மீள் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையினால், நீடிக்கப்பட்ட நிதி வசதியினை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் ஒப்புதல் அவசியமானது. அதனை பெறுவதற்கு இலங்கையின் கடன் மீள் செலுத்தும் திட்டம் நிலையானதாக மாற்றப்படவேண்டும் என தெரிவித்துள்ள IMF, அனைத்து பங்குதாரர்களுடனும் இந்த விஜயத்தின் போது பேச்சுவார்த்தை நடாத்தப்படுமென மேலும் தெரிவித்துள்ளது.