சனத் நிஷாந்தாவிற்கு எதிராக மனுதாக்கல்

ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மீது நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (29.08) சட்டத்தரணி ஒருவரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் (24.08) பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த நீதிமன்றத்தை அவமதித்ததாக பலரால் குற்றம் சுமத்தப்பட்டது.

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை விடுவிக்க சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளும் சில நீதிபதிகளும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பொதுச்சொத்து சட்டம் மற்றும் தொல்பொருள் சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளுக்கு உயர் நீதிமன்றத்தால் மட்டுமே பிணை பெற முடியும் இருப்பினும் பல நீதவான்கள் தற்போது பிணை வழங்குகிறார்கள் எனவும்   கடந்த திங்கட்கிழமை (23.08) பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இதனைதொடர்ந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த அவர்கள் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் அறிக்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.

Social Share

Leave a Reply