இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கூடிய விரைவில் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக இலங்கை பொதுஜன முன்னணியின் பொது செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும், “அவர் நாட்டை விட்டு செல்லும் சந்தர்ப்பத்தில் நாட்டிற்குள் காணப்பட்ட நிலை நம் அனைவரும் அறிந்ததே: ஆகவே அவர் மீண்டும் வருகை தரும் சந்தர்ப்பத்தில் அவருக்கான தேவையான அனைத்து பாதுகாப்புகள் மட்டுமன்றி நாட்டினுடைய முன்னாள் ஜனாதிபதி எனும் விதத்தில் அவருக்கான சலுகைகள் சரிவர வழங்கப்பட வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கூடிய விரைவில் அவர் இலங்கையை வந்தடைவர் என எதிர்பார்க்கப்படுவதாகவும்” அவர் தெரிவித்தார்.
இன்று (29.08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.