சீனா பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் பெற்றோசைனா நிறுவனத்தின் உப தலைவர், முகாமைத்துவ பணிப்பாளர் ஆகியோருக்கும், இலங்கையின் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகரவுக்கும் இடையில் இன்று(02.10) காலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
பெற்றோசைனா நிறுவனத்திற்கு, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வழங்கவேண்டிய நிலுவை தொடர்பிலும், மீள் செலுத்துவது தொடர்பிலான திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் காஞ்சன தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் 10 வருடங்களாக பெற்றோசைனா நிறுவனம் உறவினை கொண்டுள்ளதாகவும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கான பெரிய விநியோகஸ்தர் எனவும் தெரிவித்துள்ள அமைச்சர், குறித்த நிறுவனத்துடனான தொடர் விநியோகம் தொடர்பிலும் பேசசுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதகா அமைச்சர் தெரிவித்துள்ளார்.