இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் இன்று திங்கட்கிழமை(03.10) சென்றுள்ளார். மாலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.அ.ஸ்ரான்லி டிமேலுடன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டார்.
மன்னார் மாவட்ட நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபரினால் விளக்கமளிக்கப்பட்டதுடன் அரசாங்கத்தினால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் மாவட்ட மக்களுக்கு தேவைப்பாடாக உள்ள விடயங்கள் தொடர்பாகவும் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல், நிலையான வாழ்வாதார வழிவகைகள் மற்றும் கிராம மட்ட உட்கட்டமைப்பு விடயங்கள் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.