இலங்கை அணியோடு மஹேல இணைந்துள்ளார். பயிற்சி போட்டி விபரங்கள்

இலங்கை அணியின் ஆலோசனை பயிற்றுவிப்பாளர் மஹேல ஜெயவர்தன உலக கிண்ண 20-20 இலங்கை அணியோடு இன்று இணைந்துள்ளார். அவுஸ்திரேலியாவில் இன்று இலங்கை அணியின் பயிற்சிகளோடு மஹேல ஜெயவர்தன இணைந்து பயிற்சிகளை வழங்கியுள்ளார்.

உலக கிண்ண தொடர் முழுவதுமாக மஹேல இலங்கை அணியோடு இணைந்திருந்து ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.

இலங்கை அணியின் பயிற்சி போட்டி ஒன்று சிம்பாவே அணியுடன் 10 ஆம் திகதி நடைபெறவிருந்தது. சிம்பாவே அணியின் அவுஸ்திரேலியா வருகை தாமதமாகுவதனால் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த போட்டி பிற்போடப்பட்டுள்ளது.

இரண்டாவது பயிற்சிப் போட்டி 13 ஆம் திகதி அயர்லாந்து அணியுடன் விளையாடவுள்ளது.

Social Share

Leave a Reply