ICC T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி அயர்லாந்து அணியினை 35 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி குழு 01 உல் முதலிடத்தை பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அயர்லாந்து அணி அரை இறுதி வாய்ப்பை இழந்துள்ளது. அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளின் போட்டிகளில் வெற்றி பெற்றால் இரு அணிகளும் நியூசிலாந்து பெற்றுள்ள 7 புள்ளிகளை பெறலாம். ஆனால் ஓட்ட நிகர சராசரி வேகம் மிக அதிகமாக காணப்படுவதனால் அதனை எட்டிப்பிடிப்பது கடினம். அதன் காரணமாக நியூசிலாந்து அணி அரை இறுதி வாய்ப்பை பெற்றுள்ளது.
முதலில் துடுப்பாடிய நியுசிலாந்து அணி பலமான ஓட்ட எண்ணிக்கையாக 185 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. கேன் வில்லியம்சன், மற்றும் முன் வரிசை துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்புடன் நியூசிலாந்து அணி இந்த ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுக்கொண்டது.
அயர்லாந்து அணி சார்பாக ஜோஷ் லிட்டில் வில்லியம்சன், ஜேம்ஸ் நீஷாம், மிற்செல் சென்டனர் ஆகியோரின் விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம் ஹட்ரிக் சாதனை படைத்தார்.
பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து அணி நல்ல ஆரம்பத்தை பெற்ற போதும், மத்திய வரிசை விக்கெட்கள் தகர்க்கப்பட்ட 150 ஓட்டங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| போல் ஸ்டெர்லிங் | BOWELD | இஸ் சோதி | 37 | 27 | 3 | 1 |
| அண்டி பல்பிரிணி | BOWELD | மிட்செல் சென்டனர் | 30 | 25 | 0 | 3 |
| லொர்கான் டக்கர் | பிடி – பின் அலென் | இஸ் சோதி | 13 | 14 | 0 | 0 |
| ஹரி டெக்டர் | பிடி – ரிம் சௌதீ | மிட்செல் சென்டனர் | 02 | 07 | 0 | 0 |
| கரத் டெலனி | பிடி – டெவொன் கொன்வே | லூகி பெர்குசன் | 10 | 08 | 2 | 0 |
| ஜோர்ஜ் டொக்ரல் | கேன் வில்லியம்சன் | லூகி பெர்குசன் | 23 | 15 | 3 | 0 |
| கேர்ட்டிஸ் கம்பர் | பிடி – பின் அலென் | ரிம் சௌதீ | 07 | 07 | 1 | 0 |
| பியோன் ஹான்ட் | பிடி – லூகி பெர்குசன் | லூகி பெர்குசன் | 05 | 03 | 1 | 0 |
| மார்க் அடைர் | பிடி – க்ளென் பிளிப்ஸ் | ரிம் சௌதீ | 04 | 05 | 1 | 0 |
| பரி மக்கர்தி | 06 | 05 | 0 | 0 | ||
| ஜோஷ் லிட்டில் | 08 | 04 | 0 | 1 | ||
| உதிரிகள் | 05 | |||||
| ஓவர் 50 | விக்கெட் 09 | மொத்தம் | 150 |
கர்டிஸ் கம்பர்
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| ரென்ட் போல்ட் | 04 | 00 | 38 | 00 |
| ரிம் சௌதீ | 04 | 00 | 29 | 02 |
| லூகி பெர்குசன் | 04 | 00 | 22 | 03 |
| மிட்செல் சென்டனர் | 04 | 00 | 26 | 02 |
| இஸ் சோதி | 04 | 00 | 31 | 02 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| பின் அலென் | பிடி – பியோன் ஹான்ட் | மார்க் அடைர் | 32 | 18 | 5 | 1 |
| டெவொன் கொன்வே | பிடி – மார்க் அடைர் | கரத் டெலனி | 28 | 33 | 2 | 0 |
| கேன் வில்லியம்சன் | பிடி – கரத் டெலனி | ஜோஷ் லிட்டில் | 61 | 35 | 5 | 3 |
| க்ளென் பிளிப்ஸ் | பிடி – ஜோர்ஜ் டொக்ரல் | கரத் டெலனி | 17 | 19 | 2 | 1 |
| டேரில் மிட்செல் | 31 | 21 | 2 | 0 | ||
| ஜேம்ஸ் நிஷாம் | L.B.W | ஜோஷ் லிட்டில் | 00 | 01 | 0 | 0 |
| மிட்செல் சென்டனர் | L.B.W | ஜோஷ் லிட்டில் | 00 | 01 | 0 | 0 |
| ரிம் சௌதீ | 01 | 02 | 0 | 0 | ||
| உதிரிகள் | 15 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 06 | மொத்தம் | 185 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| ஜோஷ் லிட்டில் | 04 | 00 | 22 | 03 |
| மார்க் அடைர் | 04 | 00 | 39 | 01 |
| பரி மெக்கர்தி | 04 | 00 | 46 | 00 |
| கரத் டெலனி | 03 | 00 | 30 | 02 |
| பியோன் ஹான்ட் | 02 | 00 | 22 | 00 |
| ஜோர்ஜ் டொக்ரல் | 02 | 00 | 18 | 00 |