கோல் க்ளாடியேட்டர்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கிடையில் இன்று (06.12) ஹம்பாந்தோட்டையில் நடைபெற்று வரும் போட்டியில் யாழ் அணியின் துடுப்பாட்டம் நிறைவு பெற்றுள்ளது. 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 137 ஓட்டங்களை யாழ் அணி பெற்றுள்ளது. இந்த ஓட்ட எண்ணிக்கையினை காலி அணி இலகுவாக துரத்தியடிக்க கூடிய நிலை காணப்படுகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
துடுப்பாடிய யாழ் அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. தனஞ்சய டி சில்வா ஓட்ட எணிக்கையினை ஓரளவிற்கு அதிகரித்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். பின் வரிசையில் சொஹைப் மலிக், டுனித் வெல்லாளகே ஆகியோர் ஓரளவு அணிக்கான ஓட்டங்களை உயர்த்தி கொடுத்தனர். மீண்டும் இலங்கை அணிக்குள் அவிஷ்க பெர்னாண்டோ சேர்த்துக்கொள்ளப்பட இந்த தொடர் முக்கியமானதாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இந்த போட்டியில் 09 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
பந்துவீச்சில் அனைவரும் சிறப்பாக பந்துவீசியிருந்தனர். இமாட் வசீம் மிகவும் சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். இப்திகார் அஹமட் ஒரு ஓவரில் 2 விக்கெட்களை கைப்பற்றினார். கடந்த வருடம் யாழ் அணிக்கு விளையாடிய வஹாப் ரியாஸ் இன்று காலி அணிக்காக சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களை கைப்பற்றினார். நுவான் பிரதீப்பும் இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| அவிஷ்க பெர்னாண்டோ | L.B.W | இமாட் வசீம் | 09 | 09 | 1 | 0 |
| ரஹ்மனுள்ள குர்பாஸ் | பிடி – இமாட் வசீம் | வஹாப் ரியாஸ் | 01 | 09 | 0 | 0 |
| தனஞ்சய டி சில்வா | பிடி – அஸாம் கான் | நுவான் பிரதீப் | 28 | 17 | 3 | 2 |
| ரொம் கொஹ்லர் கட்மோர் | பிடி – மொவின் சுபசிங்க | நுவான் துஷார | 06 | 06 | 1 | 0 |
| சொஹைப் மலிக் | பிடி – இப்திகார் அஹமட் | இப்திகார் அஹமட் | 30 | 27 | 02 | 0 |
| திசர பெரேரா | பிடி – நுவான் பிரதீப் | இமாட் வசீம் | 16 | 16 | 1 | 0 |
| டுனித் வெல்லாலகே | பிடி – அஸாம் கான் | வஹாப் ரியாஸ் | 30 | 20 | 4 | 0 |
| ஜேம்ஸ் புல்லர் | பிடி – நுவனிது பெர்னாண்டோ | இப்திகார் அஹமட் | 01 | 02 | 0 | 0 |
| விஜயகாந்த் விஜாஸ்காந் | Bowled | நுவான் துஷார | 04 | 04 | 0 | 0 |
| மஹீஸ் தீக்ஷண | பிடி – நுவனிது பெர்னாண்டோ | நுவான் பிரதீப் | 00 | 03 | 00 | 0 |
| பினுர பெர்னாண்டோ | ||||||
| உதிரிகள் | 08 | |||||
| ஓவர் 19.5 | விக்கெட் 10 | மொத்தம் | 137 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| வஹாப் ரியாஸ் | 04 | 00 | 23 | 02 |
| இமாட் வசீம் | 04 | 00 | 22 | 02 |
| நுவான் துஷார | 3.5 | 00 | 31 | 02 |
| நுவான் பிரதீப் | 04 | 00 | 23 | 02 |
| புளின தரங்க | 03 | 00 | 26 | 00 |
| இப்திகார் அஹமட் | 01 | 00 | 02 | 02 |
ஜப்னா கிங்ஸ்
திசர பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, ரஹ்மனுள்ள குர்பாஸ், தனஞ்சய டி சில்வா, ரொம் கொஹ்லர் கட்மோர், சொஹைப் மலிக், ஜேம்ஸ் புல்லர், டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷண, விஜயகாந்த் விஜாஸ்காந், பினுர பெர்னாண்டோ.
கோல் கிளாடியேட்டர்ஸ்
குஷல் மென்டிஸ், அஸாம் கான், நுவனிது பெர்னாண்டோ, இப்திகார் அஹமட், மொவின் சுபசிங்க, இமாட் வசீம், புளின தரங்க, நுவான் துஷார, நுவான் பிரதீப், வஹாப் ரியாஸ், சம்மு அஸான்.