காலி, யாழ் அணிகளின் போட்டியில் வெற்றி பெறும் நிலையில் காலி

கோல் க்ளாடியேட்டர்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கிடையில் இன்று (06.12) ஹம்பாந்தோட்டையில் நடைபெற்று வரும் போட்டியில் யாழ் அணியின் துடுப்பாட்டம் நிறைவு பெற்றுள்ளது. 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 137 ஓட்டங்களை யாழ் அணி பெற்றுள்ளது. இந்த ஓட்ட எண்ணிக்கையினை காலி அணி இலகுவாக துரத்தியடிக்க கூடிய நிலை காணப்படுகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

துடுப்பாடிய யாழ் அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. தனஞ்சய டி சில்வா ஓட்ட எணிக்கையினை ஓரளவிற்கு அதிகரித்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். பின் வரிசையில் சொஹைப் மலிக், டுனித் வெல்லாளகே ஆகியோர் ஓரளவு அணிக்கான ஓட்டங்களை உயர்த்தி கொடுத்தனர். மீண்டும் இலங்கை அணிக்குள் அவிஷ்க பெர்னாண்டோ சேர்த்துக்கொள்ளப்பட இந்த தொடர் முக்கியமானதாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இந்த போட்டியில் 09 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

பந்துவீச்சில் அனைவரும் சிறப்பாக பந்துவீசியிருந்தனர். இமாட் வசீம் மிகவும் சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். இப்திகார் அஹமட் ஒரு ஓவரில் 2 விக்கெட்களை கைப்பற்றினார். கடந்த வருடம் யாழ் அணிக்கு விளையாடிய வஹாப் ரியாஸ் இன்று காலி அணிக்காக சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களை கைப்பற்றினார். நுவான் பிரதீப்பும் இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
அவிஷ்க பெர்னாண்டோL.B.Wஇமாட் வசீம்090910
ரஹ்மனுள்ள குர்பாஸ்பிடி – இமாட் வசீம்வஹாப் ரியாஸ்010900
தனஞ்சய டி சில்வாபிடி – அஸாம் கான்நுவான் பிரதீப்281732
ரொம் கொஹ்லர் கட்மோர்பிடி – மொவின் சுபசிங்கநுவான் துஷார060610
சொஹைப் மலிக்பிடி – இப்திகார் அஹமட்இப்திகார் அஹமட்3027020
திசர பெரேராபிடி – நுவான் பிரதீப்இமாட் வசீம்161610
டுனித் வெல்லாலகேபிடி – அஸாம் கான்வஹாப் ரியாஸ்302040
ஜேம்ஸ் புல்லர்பிடி – நுவனிது பெர்னாண்டோஇப்திகார் அஹமட்010200
விஜயகாந்த் விஜாஸ்காந்Bowledநுவான் துஷார04  04 0
மஹீஸ் தீக்ஷணபிடி – நுவனிது பெர்னாண்டோநுவான் பிரதீப்0003000
பினுர பெர்னாண்டோ      
உதிரிகள்  08   
ஓவர்  19.5விக்கெட்  10மொத்தம்137   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
வஹாப் ரியாஸ்04002302
இமாட் வசீம்04002202
நுவான் துஷார3.5003102
நுவான் பிரதீப்04002302
புளின தரங்க03002600
இப்திகார் அஹமட்01000202

ஜப்னா கிங்ஸ்

திசர பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, ரஹ்மனுள்ள குர்பாஸ், தனஞ்சய டி சில்வா, ரொம் கொஹ்லர் கட்மோர், சொஹைப் மலிக், ஜேம்ஸ் புல்லர், டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷண, விஜயகாந்த் விஜாஸ்காந், பினுர பெர்னாண்டோ.      

கோல் கிளாடியேட்டர்ஸ்

குஷல் மென்டிஸ், அஸாம் கான், நுவனிது பெர்னாண்டோ, இப்திகார் அஹமட், மொவின் சுபசிங்க, இமாட் வசீம், புளின தரங்க, நுவான் துஷார, நுவான் பிரதீப், வஹாப் ரியாஸ், சம்மு அஸான்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version