வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் கடும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவின் திருகோணமலை கடற் பரப்பின் தென் கிழக்கு திசையில் 500 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த தாழமுக்கம் மேல் மற்றும் வடமேல் திசையினூடாக கடலை கடக்கும் வாய்ப்பு காணப்படுவதாகவும், அதன் காரணமாக இடியுடன் கூடிய கடும் மழை ஏற்படுமென கூறப்பட்டுள்ளது. வட மாகாணத்திலும், திருகோணமலையிலும் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யுமெனவும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தாழமுக்கம் காரணமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அனுராதபுரம், பொலநறுவை ஆகிய பகுதிளில் மழை பெய்யுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களை உரிய முன் ஏற்பாடுகளை செய்யுமாறும், கடலுக்கு செல்பவர்கள் அவதனாமாக இருக்குமாறும், கடலுக்கு செல்ல வேண்டாமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்பட்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக மாறுமெனவும், மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.