2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிறைவடைந்த பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படவும், புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாரளுமன்ற உறுப்பினர்களே புதிதாக நியமிக்கப்படவுள்ளதாகவும், அந்த கட்சியின் சில அமைச்சர்கள், பதவிகளை இழக்கவுள்ளதாகவும் ஊடகம் ஒன்று தகவல்களை அடிப்படையாக வைத்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் டினேஷ் குணவர்தனவுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பேசசுவார்த்தைகளை நடாத்தியுள்ளது. ஆரம்பத்தில் 10 மேலதிக அமைச்சர்களை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வைத்த கோரிக்கை தொடர்பிலும் பிரதமரிடம் அந்த கட்சியினர் விசாரித்துள்ளனர்.
தகவல்களின் அடிப்படையில் விளையாட்டு, துறைமுகம், தொழிற்துறை, சுகாதரம், போக்குவரத்து, பெருந்ததெருக்கள், சக்தி,சுற்று சூழல், வன பாதுகாப்பு போன்ற அமைச்சுக்கள் சரியாக செயற்படவில்லை எனவும் அவற்றில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் தங்கள் தங்கள் தேர்தல் தொகுதி மக்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு சரியான தகவல்களை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.