சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலி இமதுவ பிரதேசத்தை சேர்ந்த 96 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் நேற்றைய தினம் சிவனொளிபாதமலைக்கு சென்ற நிலையில் இன்றைய தினம் வழங்கப்படவிருந்த அன்னதானத்திற்காக இன்று வரை அங்கு தங்கியிருந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திக் ஓயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் நல்லதண்ணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.