தம்புள்ள ஓரா மற்றும் காலி க்ளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் சிறப்பானா ஆரம்பத்தின் மூலம் தம்புள்ள அணி பலமான ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுள்ளது.
கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடிய தம்புள்ள அணி 20 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஷெவோன் டானியல் மற்றும் ஜோர்டான் கொக்ஸ் ஆகியோரின் சிறப்பான அதிரடியான ஆரம்பம் இந்த இலக்கை பெற உதவியது. இந்த இணைப்பாட்டம் 96 ஆக காணப்பட்ட வேளையில் மிகவும் இலகுவான பிடி ஒன்று நழுவ விடப்பட்டது. அதன் பின்னர் இருவரும் சத இணைப்பாட்டத்தை பகிர்ந்து கொண்டனர். 163 ஓட்டங்களை 17 ஓவர் வரை துடுப்பாடி பெற்றுக்கொண்டனர்.
தம்புள்ள அணி ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்துள்ள நிலையில் இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிடும். வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைக் முடியும். காலி அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை பெறும் அதேவேளை கொழும்பு அணியும் அடுத்த சுற்றுக்கு தெரிவாகிவிடும்.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ஷெவான் டானியல் | பிடி – தரங்க | நுவான் பிரதீப் | 80 | 55 | 5 | 5 |
| ஜோர்டான் கொக்ஸ் | பிடி – இகலகமகே | நுவான் துஷார | 77 | 58 | 6 | 3 |
| தஸூன் சாணக்க | பிடி – நுவனிது பெர்னாண்டோ | நுவான் பிரதீப் | 12 | 05 | 1 | 1 |
| பானுக்கா ராஜபக்ஷ | பிடி – தரங்க | நுவான் பிரதீப் | 00 | 01 | 0 | 0 |
| சிகான்டர் ரஷா | RunOut | 00 | 03 | 0 | 0 | |
| மட் போர்ட் | 00 | 00 | 0 | 0 | ||
| உதிரிகள் | 09 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 05 | மொத்தம் | 178 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| இமாட் வசீம் | 04 | 00 | 38 | 00 |
| நுவான் துஷார | 04 | 00 | 29 | 01 |
| நுவான் பிரதீப் | 03 | 00 | 37 | 03 |
| வஹாப் ரியாஸ் | 03 | 00 | 28 | 00 |
| லக்ஷன் சன்டகன் | 03 | 00 | 16 | 00 |
| தனுக்க டாபரே | 01 | 00 | 08 | 00 |
| இப்திகார் அஹமட் | 02 | 00 | 16 | 00 |
