பாடசாலை சீருடைகளை வழங்கும் சீனா!

எதிர்வரும் 2023ம் ஆண்டு இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணியை நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீனத் தூதரகத்தின் டுவிட்டரில் இந்த தகவல் பதிவிடப்பட்டுள்ளது.

சுமார் 5 பில்லியன் ரூபா பெறுமதியான இந்த நன்கொடையின் மூலம் நாட்டில் வருடாந்தம் தேவைப்படும் சீருடை துணி தொகையில் 70 சதவீதத்தை பூர்த்தி செய்ய முடியும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

3 மில்லியன் மீற்றர் துணிகளைக் கொண்ட இந்த சீருடை ஆடைகளின் முதல் பகுதி ஜனவரி 6 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது.

Social Share

Leave a Reply