நாயின் வாய்க்குள் …….. ஜனாதிபதி ஆலோசகர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்த கலாநிதி ஆஷு மாரசிங்க தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு அறிவித்து பதவி விலகியுள்ளார்.

நேற்று(23.12) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மகளிர் சக்தியின் தலைவியுமான ஹிருணிகா பிரேமச்சந்திர நடாத்திய ஊடக சந்திப்பில் பேராசிரியர் ஆஷு மாரசிங்க நாய் ஒன்றின் வாய்க்குள் தனது ஆணுறுப்பை செலுத்தி நாயை வன்புணர்வு செய்த வீடியோ காட்சியினை ஊடகங்களினூடாக வெளியிடப்பட்டிருந்தார். இந்த வீடியோ விவகாரம் வெளியே வந்ததும் அவர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

ஹிருணிகா நடாத்திய ஊடக சந்திப்பில் இந்த சம்பவத்தை நேரடியாக பார்வையிட்டு வீடியோ பதிவு செய்த பேராசிரியர் ஆஷு மாரசிங்கவின் நண்பியான ஆதர்ஷா கந்தானா “முகப்புத்தகம் மூலமாக ஏற்பட்ட நட்பின் மூலமாக மாரசிங்கவுடன் தான் 2 வருடம் வாழ்ந்து வந்ததாகவும், தான் வளர்த்த நாயின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானித்து கண்காணித்த வேளையில், மாரசிங்க தனது நாயினை வண்புனர்வு செய்ததனை நேரடியாக பார்த்து, அதனை வீடியோ பதிவு செய்தேன்” என கூறியுள்ளார்.

51 வயதான மாறசிங்க செய்துகொண்ட இவ்வாறான விடயம் மிக மோசமானது எனவும், இதற்கு 20 வருடங்களாவது சிறைதண்டனை வழங்கவேண்டுமென ஹிருணிகா பிரேமச்சந்திர கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகமோ, ஊடக பிரிவோ கருத்து கூறவில்லை எனவும், பொலிஸ் தரப்பிலும் இதுவரையில் கருத்துக்கள் வெளியிடவில்லை எனவும் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் மனைவியிடமும், ஜனாதிபதி செயலகத்திடமும் தான் முறையிட்டதாகவும் ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனவும் ஆதர்ஷா கந்தானா கூறியுள்ளார்.

பேராசிராயர் மாரசிங்க பாரளுமன்றத்தில் உதவி அரசாங்க கொரடாவாக பணியாற்றியுள்ளார். அத்தோடு அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

2001 ஆம் ஆண்டிலிருந்து ஜப்பானின் கல்வி மற்றும் தொழில்நுட்பத்துறை சார்ந்த பல உயர் பதவிகளை வகித்துள்ளார். ஐஷு பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறைக்கான கலாநிதி பட்டத்தை பெற்றுள்ளார்.

Social Share

Leave a Reply