ஆங் சான் சூகிக்கு சிறைத்தண்டனை அதிகரிப்பு!

மியான்மார் நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் விதித்துள்ள தண்டனையுடன், அவருக்கான முழு சிறைத்தண்டனை காலம் 33 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.

தேர்தல் மோசடி காரணமாக கடந்த 2021ம் ஆண்டு இராணுவ ஆட்சியின் கீழ் கைதாகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அதன் பின்னர் 19 குற்றச்சாட்டுகளுக்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், கடந்த வாரம் ஐ. நா பாதுகாப்பு அமைப்பு அவரை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்த போதும் தற்போது அவருக்கு மீண்டும் மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆங் சான் சூகிக்கு சிறைத்தண்டனை அதிகரிப்பு!

Social Share

Leave a Reply