அமெரிக்க உச்ச பாதுகாப்பு அதிகாரிகளின் இரகசிய விஜயம்

அமெரிக்காவின் அதி உயர் பாதுகாப்பு அதிகாரிகள் 20 பேர் கொண்ட குழு, பிரத்தியோக அமெரிக்க விமானங்கள் இரண்டில் நேற்று(14.02) இரவு இலங்கையின் பண்டாரநாயக்க சார்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இந்த விஜயம் அதி உச்ச இரகசிய விஜயம் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தக் குழுவில் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு கொள்களைகளுக்கான பிரதி உப செயலாளர் ஜேடிதியா ரோயல் உம் வருகை தந்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த விஜயத்தின் காரணமாக கடந்த சில தினங்களாக விமான நிலைய பகுதி கடும் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுளளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. . இந்த குழு வருகை தந்திருந்த வேளையில் விமான நிலையத்திலிருந்து கொழும்பு வரையுமான அதிவேக நெடுஞ்சாலையின் பாதை பொதுமக்களின் போக்குவரத்துக்காக மூடப்பட்டிருந்தது.

போயிங் C-17 க்ளோப்மாஸ்டர் II விசேட விமானத்திலேயே அமெரிக்க குழு வருகை தந்துள்ளது
அத்தோடு இலங்கையின் உயர் பாதுகாப்பு அதிகாரிகளை அவர்கள் சந்திக்கவுள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விசேட குழு, இலங்கையின் உயர் பாதுக்காப்பு அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க உச்ச பாதுகாப்பு அதிகாரிகளின் இரகசிய விஜயம்
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply