40 புதிய பஸ்கள் டிப்போவிடம் கையளிக்கப்பட்டுள்ளது!

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட பஸ்களில் மேலும் 40 பஸ்கள் இன்று (21.02) டிப்போவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற பஸ்களில், இதுவரையில் 165 பஸ்கள் 3 கட்டங்களாக பொது போக்குவரத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 500 புதிய பஸ்களும் எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட இலங்கையின் அனைத்து இடங்களிலும் உள்ள பின்தங்கிய பகுதிகளிலும் உரிய முறையில் பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையிலும், வருவாய் ஈட்டக்கூடிய வகையிலும் இந்த பஸ்களை இயக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

40 புதிய பஸ்கள் டிப்போவிடம் கையளிக்கப்பட்டுள்ளது!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply