தேர்தலை ஒத்திவைக்கக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (21.02) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைதெரிவித்துள்ளார்.
“தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன?” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, “தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தலை நடத்த வேண்டும் என்று தான் நாங்களும் கூறுகிறோம். அது ஒத்திவைக்கபடவேண்டிய ஒன்றல்ல என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
