அலுபோமுல்ல மஹபெல்லான பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் இருந்த அனைத்து சொத்துக்களும் தீவைத்து சேதப்படுத்திவிட்டு, தீயிட்டு விஷமிகள் வீட்டின் செல்ல பிராணியான “டிம்மி” எனும் நாயையும் தீயில் வீசி கொன்றுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
வீட்டிற்கு தீ வைத்ததாக கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதிகளான, தந்தை மற்றும் மகன் ஆகியோர் பொலிஸ் பாதுகாப்பில் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டுக்கு தீ வைத்த சந்தேகநபர்கள் குறித்த வீட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்து ஒரு வருடத்திற்கு முன்னர் குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்றதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்களது விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார்தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அலுபோமுல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
