ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனுவினை மார்ச் 03 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த மனு இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் S.துரைராஜா, யஷாந்த கொடகொட, பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
நிதியமைச்சின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அடங்கலாக சிலர் மீது குற்றம் சுமத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அண்மையில் “தேர்தலை நடத்தாமல் பிற்போடுவது மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவிக்கவேண்டும்” என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.