மகளிர் உலகக்கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய அவுஸ்திரேலியா

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற மகளிர் உலகக்கிண்ண தொடரின் கிண்ணத்தை ஆறாவது தடவையாக அவுஸ்திரேலியா மகளிர் அணி கைப்பற்றியுள்ளது.

எட்டாவது மகளிர் உலககிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்பு உலக சம்பியன் என்ற பெயரோடு அவுஸ்திரேலியா அணி களமிறங்கியது. முதற் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடிய தென்னாபிரிக்கா அணியை 19 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது அவுஸ்திரேலியா அணி.

முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் பெத் மூனி 53 பந்துகளில் 74 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். அஷ்ஷிலிஜெ கார்ட்னர் 29 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் ஷப்னம் இஸ்மாயில், மரிஷென் காப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

157 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை துரத்தி பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையினை தென்னாபிரிக்கா அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை லோரா வொல்வார்ட் ஏற்படுத்தினார். மற்றைய வீராங்கனைகள் அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போக, 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 137 பெற்றுக் கொண்டது. லோரா வொல்வார்ட் 61 ஓட்டங்களையும், ச்லோ ட்ரையான் 25 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அவுஸ்திரேலியா அணி சார்பாக அனைவருமே சிறப்பாக செயற்பட்டிருந்தனர். மெகான் ஸ்கட், அஷ்ஷிலிஜெ கார்ட்னர், டரிஸ் ப்ரவ்ன், ஜெஸ் ஜொனீசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பெத் மூனி போட்டியின் நாயகியாக தெரிவு செய்யப்பட்டார். அஷ்ஷிலிஜெ கார்ட்னர் போட்டி தொடர் நாயகியாக தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply