இலங்கையில் அணு மின் உற்பத்தி நிலையங்களை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் S.R.D. ரோசா கூறியுள்ளார்.
நிலையான அணு மின் உற்பத்தி மூலம் குறைந்த காபன் வெளியேற்றத்தின் மூலம் இலங்கைக்கு தேவையான மின் சக்தியினை வழங்க முடியுமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடலுக்குள் அமைக்கப்படவுள்ள மின் உலையில் கடலினுளுள்ளும், வெளியேயும் 100 மெகா வோட் வலு வழங்கக்கூடிய உலைகள் அமைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். இதன் மூலம் மின் உற்பத்திக்கான எரிபொருள் செலவினத்தை குறைக்க முடியுமென அவர் தெளிவு படுத்தியுள்ளார்.
ரஸ்சியா அரசாங்கத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவித்த பேராசிரியர் ரோசா, தேவையான தொழிநுட்பங்களை ரஸ்சியா வழங்கவுள்ளதாகவும், அணு கழிவுகளை ரஸ்சியா மீள பெற்றுக்கொள்ளுமெனவுவம், அதனை மீள் சுழற்சி செய்யும் திட்டம் அவர்களிடம் இருப்பதாகும் கூறியுள்ளார்.
அணு மின் நிலையத்தை அமைப்பதற்கான ஆய்வுகள் நடாத்தப்பட்டு உரிய இடங்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும், இடையூறற்ற உறுதியான மின் உற்பத்தியினை வழங்க முடியுமென நம்பிக்கை வெளியிட்டுள்ள பேராசிரியர் ரோசா, குறைந்த காபன் வெளியிடும் மின் உற்பத்தியை வழங்க முடியுமெனவும், 2050 ஆம் ஆண்டு முழுமையான இயற்கை சார் அணு மின் உற்பத்தியினை மேற்கொள்ள முடியமெனவும் மேலும் கூறியுள்ளார்.
