ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் நாட்டு நாட்டு பாடலை நேரடியாக பாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 12ம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில், தெலுங்கு பாடலை பாடிய ராகுல் சிப்லிகுன்ச் மற்றும் கால பைரவா இருவரும் விருது விழாவில் நேரடியாக பாடவுள்ளதாக ஆஸ்கர் அகடமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது குறித்த போஸ்டர் இணையத்தில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது.
