எல்ல – வெல்லவாய வீதியில் விபத்து!

எல்ல-வெல்லவாய வீதியின் முதலாவது மலையருகில் மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியும் டிப்பர் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் வாகனத்திற்குள் சிக்கிய லொறியின் சாரதி மற்றும் உதவி சாரதி ஆகியோர் ஒரு மணி நேர போராட்டத்தின் பின்னர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸ்நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

எல்ல - வெல்லவாய வீதியில் விபத்து!

Social Share

Leave a Reply