அரசியல்வாதிகளுக்கு மக்கள் இப்போது அஞ்சுவதில்லை!

நாட்டின் பிரதான அரசியல்வாதிகளை கண்டு நாட்டு மக்கள் அஞ்சிய காலம் ஒன்று இருந்ததாகவும்அது தற்போது முடிவுக்கு வந்து விட்டதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவின் அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மஸ்கெலிய தொகுதி அதிகார சபையின் பெண்கள் தின நிகழ்வு இன்று கினிகத்தேனவில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், ராஜபக்ஷவினரின் புண்ணியத்திலேயே ரணில் விக்ரமசிங்க தற்போது நாட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு வந்துள்ளார். நாட்டின் தற்போதைய சூழலில், வாக்காளர்கள் மத்திக்கு செல்லும் தகமை ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சிகளுக்கு மட்டுமே உண்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் வாக்காளர் மத்தியில் செல்லும் தகமை இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவிக்கு வந்ததும் வீட்டிற்குள் ஒழிந்துக்கொண்டிருந்த ராஜபக்ஷவினர் களத்திற்குள் வந்துள்ளனர்.
மேலும், போராட்டத்தின் பின்னர் நாட்டு இளம் தலைமுறையினரின் பலம் அதிகரித்துள்ளது, இளைஞர்கள் முன்வருகின்றமை நாட்டுக்கு மிகவும் சாதகமான விடயம் எனவும் ஹிருணிகா சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply