வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் பலி!

அங்குருவத்தோட்ட, படகொட சந்தியில் நேற்றிரவு (17.03) இரு குழுக்களுக்கிடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துடன் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த 36 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை படகொட பிரதேசத்தில் உள்ள வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சம்பவத்தில் காயமடைந்த இரு குழுக்களைச் சேர்ந்த 5 பேர் கொழும்பு, நாகொட மற்றும் ஹொரணை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படகொட பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் அங்குருவத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply