இலங்கைக்கு உணவு உதவிகளை வழங்க அமெரிக்க தயார்!

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் வெளிநாட்டு விவசாய சேவையான ‘McGovern-Dole Food for Education’ திட்டத்தின் மூலம் இலங்கை உணவு உதவிகளை வழங்கவுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், குறித்த உதவியின் மூலம் இலங்கைக்கு 770 மெற்றிக் தொன் அரிசியும் 100 மெற்றிக் தொன் தாவர எண்ணெய்யும் வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவுடன் கூடிய பாடசாலை உணவு வழங்கும் திட்டத்தை அவதானிப்பதற்காக குருயர்கம ஆரம்பப் பாடசாலைக்குச் சென்றிருந்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2021 முதல் தற்போது வரை, அமெரிக்க வேளாண்மைத் துறை, 7 மாவட்டங்களில் உள்ள 835 ஆரம்ப பாடசாலைகளில் பயிலும் 95,000 மாணவர்களுக்கு புரத சத்துமிக்க உணவுகளை வழங்கி வருகின்றது.

Social Share

Leave a Reply