கடும் மழை காரணமாக மண்சரிவு அபாயம் கருதி மூடப்பட்ட கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் ஒரு பாதை திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (19.03) மாலை பெய்த கடும் மழையினால் வீதியின் 18 வளைவுப் பாதையின் இரண்டாவது வளைவைச் சூழவுள்ள பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், அபாய நிலை குறையும் வரை வீதியை மூடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்திருந்தது.
மேலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன அப்பகுதியை பார்வையிட்டதுடன், பாதுகாப்பற்ற நிலைமைகளை உடனடியாக அகற்றி வாகனங்கள் வழமைபோல் பயணிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதையடுத்து இப்போது இந்த பாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.