எல்பிட்டிய பேரூந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்!

எல்பிட்டிய பேரூந்து டிப்போவின் சாரதிகள், நடத்துனர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் சம்பள பிரச்சினை காரணமாக இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களது இந்த நடவடிக்கை காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து சேவை முற்றாக தடைப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நீண்ட தூர மற்றும் குறுகிய தூர சேவைகள் இடைநிறுத்தப்பட்டதால் எல்பிட்டிய நகரின் பயணிகள் கடும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பள உயர்வு மற்றும் நிலுவை சம்பள தொகையை வழங்குவதில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இந்த வேலை நிறுத்தத்தை முன்னெடுப்பதாக சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply