சரத்வத்தேச நாணய நிதியத்தின் விஸ்தரிக்கப்பட்ட கடன் திட்டத்தின் கீழான கடன் தொகையின் முதற் கட்ட கொடுப்பனவு இன்று கிடைக்கப்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியலாம்பிட்டிய தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் டொலர் வைப்பீட்டு கணக்கிற்க்கு சர்வதேச நாணய நிதியம் வைப்பிலிடுமெனவும், நாட்டின் தேவைகளுக்கு ஏற்றவாறு திறைசேரியினால் அவை பாவிக்கப்படுமெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தினால் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட கடன்கள் நேரடியாக டொலர் வைப்புக்கே சென்றதாகவும், ஆனால் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வறுமைக்கு கோட்டுக்கு உட்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க இந்த பணத்தினை பாவிக்க IMF அனுமதி வழங்கியுள்ளதாகவும் இராஜங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.