எரிபொருள் விலைகள் குறைவடைந்துள்ள நிலையில், பாடசாலை வேன் கட்டணத்தை குறைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் மல் ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய விலையை பேசி தீர்மானிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
விலை அதிகரிப்பு செய்வதை போலவே, விலையில் குறைப்பையும், பெற்றோர் மற்றும் வாகன உரிமையாளர் அல்லது ஓட்டுநருடன் இணைந்து கலந்தாலோசித்து விலையைக் குறைக்குமாறு தாம் கேட்டுகொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு தூரத்துக்கு இயக்கும் தொகைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாக இருப்பதால் குறிப்பிட்ட ஒரு சதவீதத்தில் விலையை குறைப்பதில் சிக்கல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளர்.