குறைக்கப்பட்ட பஸ் கட்டணத்தை காட்சிப்படுத்தாமல் அதிக கட்டணம் அறவிடும் பஸ்களை சோதனை செய்யும் வேலைத்திட்டம் மேல்மாகாணத்தில் இன்று (03.04) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் குறைக்கப்பட்ட பேருந்து கட்டங்களை கருத்திற்கொள்ளாது, சில பேருந்து சேவைகள் அதிக கட்டணம் அறவிடுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பஸ் கட்டணப் பதிவேட்டை பயணிகள் முன்னிலையில் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்சீவ தெரிவித்துள்ளார்.