தற்போதைய நிலவரப்படி மின்சார கட்டணத்தை 30% குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை வீழ்ச்சி மற்றும் டொலரின் பெறுமதி வீழ்ச்சி என்பவற்றின் அடிப்படையில் மின்சார உற்பத்திச் செலவு குறைவடைந்தமையே இதற்குக் காரணம் என நேற்று (04.04) காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றிற்கு அழைப்பு விடுத்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மின்சார கட்டண குறைப்பு யோசனை தொடர்பான கடிதம் மின்சார சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.