எரிபொருள் கையிருப்பு தொடர்பில் விசேட தீர்மானங்கள்!

அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் இன்று (06.04) இடம்பெற்ற கலந்துரையாடலில் பல விசேட தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் களஞ்சிய நிலையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரசபை மற்றும் அதிகாரிகளுடன் இடம்பெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின்போது இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த கலந்துரையாடலின்போது, எரிபொருள் களஞ்சியங்களில் குறைந்தபட்சம் 50% எரிபொருள் இருப்புகளை பராமரிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து நிறுவனங்களுக்கும் சொந்தமான கொள்கலன் வாகனங்களுக்கும் GPS கருவிகள் பொருத்தும் பணி ஏப்ரல் 15ம் திகதிக்குள் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் தனியாருக்கு சொந்தமான கொள்கலன் வாகனங்களுக்கும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் காஞ்சன மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply